ஜம்புகேசுவரம் |
ஸ்தல புராணச் சுதைச் சிற்பம் |
சோழமன்னன் சுபதேவனுக்கும் அவனது மனைவி கமலவதிக்கும் பல்லாண்டுகள் மக்கட்பேறு இல்லாதிருக்க, இருவரும் தில்லைக் கூத்தனைப் பிரார்த்தித்த பயனாகக் கமலவதி கருவுற்றாள். மகவு பெறும் வேளையில் அரசவைக்கு வந்த சான்றோர், இக்குழந்தை இன்னும் ஒரு நாழிகைக்குப் பிறகு பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே, அரசியாரும், தன்னைத் தலை கீழாகக் கட்டித்தொங்க விடுமாறு பணித்தார். அதனால் ஒரு நாழிகைக்குப் பின் குழந்தையை ஈன்றெடுத்தார். முற்பிறப்பில் யானையிடம் கொண்ட கோபத்தால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. தனது குழந்தையை அரசியார் அரவணைத்து, உச்சி மோந்து, " என் கோ செங்கணானோ " என்று கூறிவிட்டு உயிர் நீத்து விட்டார்.
கோச்செங்கணானாகிய தவப்புதல்வனைச் சுபதேவன் அன்புடன் வளர்த்து அவனுக்கு சோழர்குல அரசுரிமையைத் தந்து முடி சூட்டிய பிறகு சிவலோகம் சேர்ந்தான். முற்பிறப்பில் இறைவன் பால் கொண்ட எல்லையற்ற பக்தியின் தொடர்ச்சியாகக் கோச்செங்கட்சோழர் , வெண்ணாவலின் கீழ் வீற்றிருக்கும் வேத நாயகனுக்குப் பணிகள் பல செய்தார்.
திருநல்லூர் மாடக் கோயில் |
சிவாலயங்களுக்கு அமுது படையல் செய்ய நிவந்தங்களும் ஏற்படுத்தித் தந்ததாகப் பெரிய புராணம் இவரைச் சிறப்பிக்கிறது. பின்னர் தில்லைக்குச் சென்று பன்னாள் பணி செய்து, மறையவர்க்கு மாளிகைகள் அமைத்துத் தந்தார். இவ்வாறு சிவப்பணி செய்துவந்த நாயனார், மாசி மாத சதயத் திருநாளன்று பொன்னம்பலவனின் திருவடி நீழலை அடைந்தார்.
திருவானைக்காவில் குருபூஜை |
திருத்தொண்டர்களது பெருமையை யாரே அறிவார் ?
Thanks for this beautiful share, dear friend.
ReplyDelete