வேதாரம்பம்செய்வதற்குஉயிர்நாடியாகஇருப்பதுஉபநயனம். அவ்வாறு இருபிறப்பாளர் ஆனபிறகு பிரதிவருஷமும் செய்யப்படும் உபாகர்மா முக்கியத்துவம் வாய்ந்தது. தேவதர்ப்பணம், ரிஷிதர்ப்பணம்ஆகியவற்றை விஸ்தாரமாக அப்பொழுது செய்யப்படுகிறது. அதிலும்ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும், நதிகளுக்கும், இதிகாச புராணங்களுக்கும் விசேஷபூஜை செய்யப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ செய்த பாபங்களுக்குப் பிராயச்சித்தம்கோரப்படுகிறது. பிராயச்சித்தம்செய்துவிட்டபடியால், தொடர்ந்து இனியும் பல்வேறு பாபங்கள் செய்யலாம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. இனிமேலாவது அவற்றைச் செய்யாமலிருக்க எத்தனை முடியுமோ அத்தனை பிரயத்தனம் பண்ணவேண்டும் என்பதே முக்கியம். நமக்கு ஆத்ம சுத்தியை அளிக்கும் கர்மாவானதால் செய்யும்போது சிரத்தை மிகமிக அவசியம்.
ஒரு சில வருஷங்களில் உபாகர்மாவை என்றையதினம் செய்வது என்று நிர்ணயம் செய்வதில் உடன்பாடு ஏற்படுவதில்லை. இந்த வருஷம் ஸாமோபாகர்மாவை, பாம்புபஞ்சாங்கப்படி இன்றையதினமும் (24.7.2012) , வேறுசிலர், புரட்டாசி 1-ம் தேதி செய்வதே சிறந்தது என்றும் வேறுசிலர், அக்டோபர் 14-ம்தேதிதான் செய்ய வேண்டும் என்றும் தகுந்த விளக்கங்களோடு நியாயப் படுத்துகிறார்கள். இந்நிலையில், தங்கள் ஸௌகர்யப்படி ஏதாவது ஒருநாள் செய்துவிட்டால் போகிறது என்று ஸாமவேதிகள் வந்துவிடுவார்களோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. கடைசியில் கர்மாவில் சிரத்தை குறைந்துவிடும் நிலைமை வந்துவிடக்கூடாது. ஏற்கனவே, ரிஷிபூஜை, ஹோமம் முதலியவற்றைப் பண்ணாமல் யக்யோபவீதம் மட்டும் செய்து வைக்கும் குழுவோடு உபாகர்மாவைப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுகிறவர்களைத்தான் பார்க்கிறோமே! இவர்களால் மற்றஎல்லாவற்றுக்கும்லீவுபோடமுடியும். உபாகர்மாவுக்கு மட்டும் லீவுபோட மனசுவராது! கலியின்கொடுமை என்பதைத் தவிர வேறு என்னசொல்வது?
உலக க்ஷேமத்திற்காகச் செய்யப்படும் ஸந்த்யாவந்தனம், அதில்வரும் அர்க்க்ய ப்ரதானத்தாலும், காயத்ரிமந்த்ர ஜபத்தாலும் மகிமைவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வேதநாயகனாகியஸ்ரீபரமேச்வரனைக்காயத்ரிமந்த்ரம் குறிப்பிடுவதாகக் கஞ்சனூர் ஹரதத்தர்,தாம்அருளியஸ்லோகபஞ்சகத்தில் அருளியிருக்கிறார். இந்த ஸ்லோகங்கள் தமிழில், ஸ்ரீமாதவசிவஞான ஸ்வாமிகள் மொழி பெயர்த்துள்ளார். ஒரேவரியில்அவர், " உயர்காயத்திரிக்கு உரிப்பொருள்ஆகலின்" என்றுஅற்புதமாகக்குறிப்பிட்டுள்ளார்.
காவிரியின் வடகரையிலுள்ள சிவஸ்தலங்களுள் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும்வழியில் உள்ள கஞ்சனூரும் ஒன்று. கற்பகாம்பிகா சமேத அக்நீச்வரசுவாமியின் ஆலயம் இங்கு பிரசித்திபெற்றது. இவ்வூரில் வைஷ்ணவ குடும்பத்தில் ஸ்ரீமஹாவிஷ்ணுவின்அவதாரமாகஅவதரித்த சுதர்சனன்என்றசிறுவன், மகாசிவபக்தனானதைக் கண்டுஅவ்வூரார்ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் சன்னதியில் உயரத்தில்கட்டியபழுக்கக்காய்ச்சிய முக்காலியின்மீது அவனை அமர்ந்துகொண்டு சிவபரத்துவத்தை நிரூபிக்கச் சொல்லவே, ஸ்ரீஅக்நீச்வரரின் கருணைக்குப் பாத்திரமாகி ஹரதத்தன்என்ற தீக்ஷாநாமமும்பெற்றஅந்தச்சிறுவனும்அவர்கள்சொல்லிய படியே செய்து, ஸ்லோகபஞ்சகம்பாடி, 22 பிரமாணங்களால்சிவபரத்துவத்தைநிரூபணம் செய்தார். மேலும், சுருதி சூக்தமாலை, ஹரிஹரதாரதம்யம்ஆகியகிரந்தங்கள் மூலமாகவும்இந்தமகான்நமக்குஉணர்த்தியுள்ளார்கள். இவர்களதுசன்னதியை கஞ்சனூர்செல்பவர்கள்அவசியம்தரிசிக்கவேண்டும்.
சரித்திரம்ஒருபக்கம்இருந்தாலும்இவர்கள்நியமத்தோடுவாழ்ந்துகாட்டியதை நாம்கவனிக்கவேண்டும். தினமும்அதிகாலையில்காவிரியில்ஸ்நானம் செய்துவிட்டு,நித்யகர்மானுஷ்டானங்களையும்,பூஜையையும்முடித்துக் கொண்டு, கஞ்சனூர்அக்நீச்வரர்ஆலயத்தைதரிசித்துவிட்டு, திருக்கோடிகா(வல்), வடதிருவாலங்காடு, திருவாவடுதுறை, தென் குரங்காடுதுறை(ஆடுதுறை) , திருமங்கலக்குடி, திருமாந்துறைஆகிய ஸ்தலங்களைத்தரிசித்துவிட்டு, ஏழாவதாகக்கஞ்சனூர்அடைந்து, சப்தஸ்தான தரிசனத்தை முறையாகச் செய்துவந்தார்ஹரதத்தர்.
நாம் தினமும் நியமமாக ஏதாவது ஒரு தெய்வகாரியத்தை செய்கிறோமா என்று நமக்குநாமே கேட்டுக் கொள்ளவேண்டும். குறைந்தபக்ஷமாக நியமத்தோடு அனுஷ்டானமாவது செய்கிறோமா என்றும் கேட்டுக் கொள்ளலாம். இல்லை என்று மனசாக்ஷி சொன்னால்அதற்கு நிவர்த்திசெய்யவேண்டாமா? ஆத்ம சுத்திக்காகத் தானே நியமநிஷ்டைகள்எல்லாம். " நித்தலும்தூயேன்அல்லேன்" என்ற அப்பர்சுவாமிகளது வாக்குநினைவுக்குவருகிறது.
இதெல்லாம் உலகக்ஷேமத்திற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகள்என்று தெரிந்தும் அதைக் கைவிட்டுவிட்டுத் தர்மத்தை அனுசரிக்கத்தவறிய பாபத்தை சம்பாதித்து அதற்கான தண்டனையையும்அனுபவிக்கவேண்டியதுதானா? ஞாயிற்றுக்கிழமையிலாவது சஹஸ்ர ஆவர்த்தி காயத்ரியை ஜபித்துப் ப்ராயச்சித்தத்தைத் தேடிக் கொள்ளலாமே. இதனால், மழை பொய்த்துவிட்டுப் பயிர்களும் உயிர்களும் வாடும் இக்காலத்தில் மழைபொழிந்து சுபிக்ஷம் ஏற்பட நம்மாலானதைச் செய்யலாம் அல்லவா?
ஊர் நன்றாக இருந்தால் நாம் எல்லோரும் நன்றாக இருக்கலாம். எட்டுமணிக்கு எழுந்திருப்பது; குளிக்காமல்சமைப்பது; பலநாட்களுக்கு சேர்த்து சமைப்பது, கோலம்போடாமல்இருப்பது, ஆசாரத்தைக்கைவிடுவது, பாரம்பர்யமான உடைகளை பண்டிகைக்காலங்களில்கூட உடுத்திக்கொள்ளாமல் இருப்பது, பகவானுக்கு அர்ப்பணிக்காமலே சாப்பிடுவது, போன்ற பாபங்களைச் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைத் திருத்திக் கொண்டு நியமத்தோடு வாழ பிரயத்தனப்பட வேண்டும். அதுவரையில் உபாகர்மா வெறும் சம்பிரதாயமாக மட்டும்இருக்கும். அதற்கான ஞானத்தை ஞானஸ்வரூபனான பரமேச்வரன் அருளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.