ஹரதத்தர் ஆலயம், கஞ்சனூர் |
ஆண்டுதோறும் தை மாத சுக்ல பஞ்சமியில் ஹரதத்தருடைய ஆராதனை, பழங்காலந்தொட்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடந்து வந்த இவ்வைபவம் நாளடைவில் ஏக தின உற்சவமாக ஆகியது. அக்னீசுவரர் ஆலயத்திலிருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு ஆகி , ஹரதத்தர் ஆலய வாயிலுக்கு வந்ததும், ஹரதத்தர் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்குக் கயிலைக் காட்சி வழங்கி,முக்தி கொடுத்த வரலாற்றின் அடிப்படையில் இது நடத்தப்படும். சமீப காலமாகப் பஞ்ச மூர்த்தி புறப்பாடும் நின்று போய், ஹரதத்தரை மாத்திரம் வீதியில் உள்ள அவரது கோயிலுக்கு எழுந்தருளச் செய்து உபயதாரர் மூலம் இந்த ஆராதனையை நடத்தி வந்தனர் . இந்த ஆண்டு மீண்டும் பஞ்ச மூர்த்தி புறப்பாடு அதே உபயதாரர் மூலம் நடத்தப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. முன்போலவே, இது மூன்று நாள் விழாவாக நடைபெற அக்னீசுவரப்பெருமான் அருள் துணை நிற்க வேண்டும்.
ஹரதத்தரது ஆலய மகாமண்டபக் கூரையில் அவரது வரலாற்றைச் சித்திரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சித்திரம் பற்றிய சிறு குறிப்பும் அதன் கீழ் தரப்பட்டுள்ளது.
அக்னீசுவர சுவாமி ஆலயத்தில் காலையிலேயே பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமாகி, அலங்காரம் செய்விக்கப்பெற்று மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அதே நேரத்தில், ஹரதத்தர் ஆலயத்தில் சுமார் பத்து மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. மூலவருக்குச் செய்யப்படும் புஷ்பாலங்காரத்தைக் கண்ட கண்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கண் பெற்ற பயனே அதுதானே!
கயிலைக் காட்சி |
இதெல்லாம் நடந்ததா, ஹரதத்தர் கயிலைக்குச் சென்றபோது கூடவே வந்த நாயையும் தன்னுடன் கயிலைக்கு அழைத்துச் சென்றார் என்பதை எப்படி நம்புவது என்பவர்களுக்காக இங்கு அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சியைத் தருகிறோம். பஞ்ச மூர்த்திகளையும் சுற்றி மக்கள் கூட்டம் இருந்த அந்த வேளையில், அக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த ஒரு வெள்ளை நிற நாய் சுவாமிக்கு நேராக நின்று சுவாமியையே பார்த்துக் கொண்டு இருந்ததை மிகச் சிலரே கண்டு ஆனந்தித்தார்கள். அடுத்த கணம் அந்த நாயைக் காண முடியவில்லை. ( யாரும் அதை விரட்டவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது). இதற்கு மேல் எழுத வார்த்தைகள் வரவில்லை.
No doubt at all , that it was another TiruviLaiyaadal, dear Sekhar. Thanks for sharing!
ReplyDeleteசிவாய நம அய்யா,
ReplyDeleteகோவையிலிருந்து பாடல் பெற்ற தல யாத்திரை செல்பவர்கள் இருந்தால் அவர்கள் விவரம் தர வேண்டுகிறேன்
அஸ்வத்த நாராயணன்
கோவை
8527817014